Posts

Showing posts from 2022

கவிஞரின் நினைவுமலர் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

ஈழத்து கவிதை மூலவர்களில் ஒருவரான‌ கவிஞர் தா. இராமலிங்கம் அவர்கள் 1988 இல் இயற்கை எய்தினார். அவ்வேளையில் எழுதப்பட்ட அவர்சார்ந்த நினைவுமலரில் சில பகுதிகள் இல்லாமல் போய்விட்டன. ஆயினும் அந்நினைவு மலரின் மூலப் பதிவுகளிலிருந்து ஒரு தொகுதி உள்ளடக்கங்கள் பிரதி செய்யப்பட்டு, அவரது முழுமையான கவிதைகளை முன்னிறுத்திய ZOOM வழியிலான உலகம் தழுவிய‌ கலந்துரையாடல் நடைபெறவுள்ள‌ வேளையில் 34 ஆண்டுகளின் பின்னர் புதுப்பிக்கப்படுகின்றது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மானாவளை வலைப்பதிவின் அறிவிப்ப ு ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி! சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்