Posts

Showing posts from 2008

நீ ங் கா த நி னை வு க ள் !

Image
.......... ..........

வாழ்க்கைச் சுவடுகள்

Image
பெயர்: .................... தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் தோற்றம்: ................. 16.08.1933 பிறந்த இடம்: ............ கல்வயல் வடக்கு, சாவகச்சேரி தந்தைபெயர்: ............. தாமோதரம்பிள்ளை தாய் பெயர்: ............... சின்னப்பிள்ளை ஆரம்ப, இடைநிலைக்கல்வி: ..... யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பல்கலைக்கழகக்கல்வி: ............ கல்கத்தா சிற்றி கொலிஜ் பட்ட மேற்படிப்பு(B.A.-Hons) ....... சென்னை பச்சையப்பன் கல்லூரி திருமணம்: .............. 1959ம் ஆண்டு புகுந்த இடம்: .......... மீசாலை வடக்கு, கொடிகாமம் மனைவி பெயர்: ...... மகேஸ்வரி கல்விப்பணி: இரத்தினபுரி புனித சென்லூக்கா கல்லூரி ...... ஆசிரியர் ............................. 1959முதல் 1968 வரை யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் ...... ஆசிரியர், உபஅதிபர் .......... 1968 முதல் 1982 வரை ...... அதிபர் .............................. 1982முதல் 1993 வரை கல்விச் சேவையில் இருந்து இளைப்பாறல்-1993 இலக்கியப்பணி இவருடைய "புதுமெய்க் கவிதைகள்" (1964), "காணிக்கை" (1965) ஆகிய இரண்டு கவிதைத் தொக

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

சி.ரமேஷ் தமருகம் வலைப்பதிவில் 2008 செப்ரெம்பர் 26ல் வெளியான கவிஞரின் கவிதைகள் பற்றிய ஆய்வு ஈ ழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார். 1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

Image
யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய இன்றைய அதிபரின் விதப்புரை முன்னாள் அதிபர் திருவாளர் தா.இராமலிங்கம் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மீசாலையூர் மக்களுக்கு மட்டுமல்ல தென்மராட்சி மக்களுக்கே பயன்பெறும் கல்விமானாக விளங்கினார். 1968ம் ஆண்டு வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் நான் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம், எனது குருவாக கணித பாட ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். இளமைத்துடிப்பும்,கற்பித்தலில் உள்ள ஆற்றலும், அக்கறையும், திறமையும் எல்லோர்மனத்தையும் தொட்டுக் கொண்டது. தனியார் கல்வி நிலையங்கள் அற்ற அந்தக்காலத்தில் ஊர்ப்பிள்ளைகளை மட்டுமன்றி என்னையும் தனது வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்து, எல்லோரையும் சித்திபெறவைத்து இன்பம் கண்ட பெருமகனார். கலைப்பட்டதாரியாகிய இவர் தமிழறிவு, சமயறிவு நிரம்பப் பெற்றவராக விளங்கி உயர்தர வகுப்புக்களில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து உயர் சித்திகளையும் பெறவைத்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் நல்லறிவு பெற்றவர்களாகவும், உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும், மேன்நிலை யடைந்தவர் களாகவும் விளங்குக

புகழ் பூத்த நண்ப

Image
கல்வி அறிவுமிக்க சான்றோர்கள் வாழும் கல்வயல் மண்ணில் பிறந்த பெருமைக்குரியவர் நீங்கள். நல்லவரையும், நல்லனவற்றையும் நன்கு தெரிந்தவர். கடமையும் சேவையும் உங்களது இரு கண்கள். வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் புகழ்பூத்த அதிபர்களில் நீங்களும் ஒருவர். எமது சமயத்தில் ~சாதி என்ற அரக்கனைத் துரத்தி அடிக்கவேண்டும் என்று கூறுவீர்கள். சொல்லிலும், செயலிலும் வாழ்ந்து காடடியவர் நீங்கள். உங்கள் கல்விக் குடும்பம் உங்கள் பண்பிற்கும், சேவைக்கும் இறைவன் அளித்த பரிசில். உங்கள் நலனே தங்கள் நலன் என்ற சுயநலமில்லாத தாயின் அன்பை நான் நன்கு அறிவேன். 'பொன்னும் பொருளும் வேண்டாம். தான் விரும்பிய பெண்ணே மேல்" என்ற தாயாரும் சகோதரர்களும் போற்றுதற்குரியவர்கள். இவர்களின் மேலான அன்பே தங்கள் வாழ்வின் ஆணிவேராகப் பரந்து, அன்பு மனைவியைப் பெற்று, நல்லதோர் குடும்பத்தை உருவாக்கி, பெரும் கல்விவிருட்சமாக வளர்ந்து உலகில் ஓங்கி உயர வைத்ததெனலாம். இவை மட்டுமன்றி நல்லாசான்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், பெற்றமை மேலும் உங்கள் வளர்ச்சிக்கு உரமூட்டியதெனலாம். நண்பரே! எமது பட்டப்படிப்புக் காலம் பச்சைப்ப

எளிமைமிகு படைப்பாளி எங்கள் கவிஞர்

Image
நான் மாணவனாக இருந்த காலங்களில் திரு. தா. இராமலிங்கம் அவர்களது சில கவிதைகளைப் படித்தமை காரணமாக ஒரு கவிஞர் என்றவகையில் என்னால் அறியப்பட்டவராக அவர் இருந்தார். எனது மாணவப்பருவத்திலேயே அவரது இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துவிட்டிருந்தன. தாயகத்தில் அவர் எனது அயலூரான கல்வயலில் பிறந்து வளர்ந்தவர். ஆயினும் அவரை நான் நேர்முகமாகச் சந்தித்திருக்கவில்லை. எங்களது முதல் சந்திப்பு மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்திற்கு நான் மாற்றம் பெற்றுச் சென்ற எண்பதுகளின் ஆரம்பத்தில் நிகழ்ந்தது. ஒன்பது ஆண்டுகள் வரையில் அவருடன் ஆசிரியப்பணியினை அங்கு நான் மேற்கொண்டிருந்தேன். எனதிருபதாண்டுகால ஆசிரிய பணியில் எனது மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மனிதராக, அதிபராக அவரை இன்றுவரை என் நினைவுகளில் கொண்டிருக்கின்றேன். ஒரு சிறந்த ஆசிரியராக, தகை சார்ந்த நிர்வாகியாக, சக ஆசிரியர்களுடன் மிக நல்லுறவு கொண்ட அதிபராக அவர் விளங்கினார். அவரது எளிமையான வாழ்க்கைமுறை அவர் சார்ந்த அனைத்து அம்சங்களிலும் நிலைபெற்றிருந்தது. நடையுடை பாவனையிலும் உரையிலும் எழுத்திலும் கவிதைவரிகளிலும் எளிமையான, இதமான நடைமுறையினை அவர் பேணி வந்தார். திரு. இராம

கவிஞர் குடும்பம் / வம்சாவழி

Image

தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு

Image
என்.கே. மகாலிங்கம் அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத, தொடத் தயங்கிய கருப் பொருளையும் தன் கவிதைகளில் கையாண்டதும் தான். அவரின் கவிதைகளில் மூன்று குணாம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று, காமம். இரண்டாது, ஆசாரம் அல்லது ஒழுக்கம் அல்லது பண்பாடு. அதாவது, யாழ்ப்பாணக் கலாசாரத்தின் போலி ஒழுக்கம். குறிப்பாக, காமம் சார்ந்தது. மூன்றாவது, அடக்குமுறையைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட இனவுணர்வு. நாலாவது ஒன்றும் உள்ளது. அது சரியாக வெளிவரவில்லை. அதாவது, அவருடைய ஆன்ம விசாரமும் அனுபவமும். சிறுகதை, நாவல்களில் காமம் சார்ந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கருப்பொருளாகக் கையாண்டவர்கள் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், கே.டானியல், பவானி ஆழ்வாப்பிள்ளை என்றால் கவிதையில், அதுவும் புதுக் கவிதையில், காமத்தை கருப்பொருளாக பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுத்தியவர் தா.இராமலிங்கம். அவர் கடந்த மாதம் தன் எழுபத்து ஐந்தாவது வயதில் கிளிநொச்சியில்

மங்கா உயிரோவியம்

Image
அ டு த் த வீட்டு நிகழ்வு , அ டுத்த கண்டம் அவுஸ்திரேலியாவிலிருந்து அறிந்த போது, தகவல் பரிமாற்ற நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியாது. செய்தியறிந்து செய்வதறியாது நின்றோம். துயர்தோய்ந்த அச்செய்தி ஒரு முடிவின்ஆரம்பம்.(BIGINNING OF AN END) நிழலை நிஜமென்று மயக்க நிலையில் மிகவேகமாகச் சுழலும் பூம்பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மெய் எனும் பொய்த் தோற்றத்தை மெய்யாக நினைத்து எத்தனை செயற்பாடு. இந்த அரங்கில் நில்லாதனவற்றை நிலை என நினைப்பு. அழகிய ஒவியம்போன்றது அவரது வாழ்வு மங்குவாரின்றி மறையார் செயல்வீரர். (THEY SIMPLY FADE AWAY)தன்னைத்தான் காதலன் ஆவார். ஆகையால் அவரது வாழ்க்கை பிறருக்கு மனத்தாலும் தீங்கறியாது. ஆய்ந்தோய்ந்து எடுத்த கருமத்தைக் கச்சிதமாக முடிக்கும்ஆற்றல்அவருக்கு கைவந்த கலை. தான் சரியென உணர்ந்ததை எந்த சந்தர்ப்பத்திலும் காய்தல், உவத்தல் இன்றி துணிந்து சொல்பவர், செய்பவர். தான் பிழையெனக் கண்டதைச் செய்யவே மாட்டார். ஆதனால் அவரோடுநன்றாகப் பழகியவர்கள் கூட பிழையானதைச் செய்யுமாறு கேட்கத் தயங்குவர். நான் அவருடன் 34 ஆண்டுகள் பழகியும் அவரை முற்றுமுழுதாக

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

Image
சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிறந்த தா. இராமலிங்கம் அவர்களின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது. இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள்(1964) காணிக்கை(1965) நூல்கள் மூலம் கிடைக்கிறது. 1960ல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ.யேசுராசா, திரு. பத்மநாபஐயர் போன்றோர் தொகுத்த 'மரணத்துள் வாழ்வோம்" தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர் பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூகநோக்கு, ஆழ்ந்தபுலமை, மனிதநேயம், இவற்றிற்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதிக அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான். 'ஞாபகமறதி" நோயினால் தன்னை மறந்த நிலையில் வாழ்ந்திருக்கிறார்

இரங்கல் கூட்ட அறிவிப்புகள்

Image
உதயன் நாளிதழ் - ரொரென்ரோ, கனடா வீரசிங்கம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம். கனடா

இனி ஏது?

Image
எங்கிருந்து வந்ததுவோ இந்தக் காற்று தழுவிநிற்கும் மூங்கில் இரண்டு உராய்ந்து பறக்கிறது சினப் பொறிகள் தீப்பொறியாய்! காய்ந்த சருகு சுள்ளி விறகுகளைப் பற்றி, எரியுது பட்ட மரங்களிலும் சேர்ந்து பெருகு நெருப்பு! தளிர்ச் சிரிப்பால் குளிர்விக்கும் செடிகொடிகள், கொத்துக் கொத்தாய்க் பூத்துத் துலங்குகிற செம்மலர்கள் இன்னும் பலவகைகள், குலைகுலையாக் காய்த்துத் தூங்குகிற காய்வகைகள் கனிவகைகள் எல்லாம் வெம்பி வெதும்புவதோ? கருவண்டு முகந்தெரியும் முதுகோட்டுச் சிறகு ஊதி வந்து தேன் உறிஞ்ச.... இனி ஏது? கூர்ச் சொண்டுச் சிறுபறவை கூட்டமாய் வந்து கனிகொத்த..... இனி ஏது?