Posts

Showing posts from September 21, 2008

கவிஞர் கால்நூற்றாண்டு பணிபுரிந்த மன்றம்

வீரசிங்கம் மகாவித்தியாலய வரலாறு ஸ்ரீமான் வீரசிங்கம் அவர்கள் மீசாலை வடக்குப் பகுதியில் 1840ம் ஆண்டிற்கும் 1915ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீவித்திருந்தார்கள். இவர் மீசாலை வடக்கில் இருந்த வேதாரணியரின் மகன். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றவர். நியாய துரந்தரராவற்கான படிப்பும் படித்தவர். அவர் சீவித்திருந்த காலத்தில் இப்பகுதியிலுள்ளவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாய் இருந்தார்கள். தம் இளமைப்பருவத்திலிருந்தே இப்பகுதி யிலுள்ளவர்களைக் கல்வி அறிவு உள்ளவர்களாக்க முயன்றார். அந்தக்காலத்தில் அமெரிக்க மிஷனரிமார் அரசினர் உதவியோடு கிராமங்களில் பாடசாலைகளை உண்டாக்கிக் கல்வி கற்பித்து வந்தார்கள். அவர்களுக்கு மீசாலையில் இருந்து புத்தூருக்குப் போகும்தெரு - கண்டித் தெருவைச் சந்திக்கும் இடத்தில் தன்னுடைய காணியைப் பாடசாலை வைத்து நடாத்துவதற்குக் கொடுத்தார். அந்தப் பாடாசாலை மீசாலை முச்சந்திப் பாடசாலை எனக் கிறீஸ்தவ மிஷனறிமாரின் பாடசாலை ஆக 1924ம் ஆண்டு ஆவணி மாதம் முடிய நடைபெற்று வந்தது. கிறீஸ்தவ மிஷனரிமார் ஆரம்ப கல்வி கற்பிப்பதன் மூலம் கிறீஸ்தவ சமயத்தையும் போதிப்பதையும் அவர் கண்டார்.

நெஞ்சு பதறுகுது

Image
கல்வீடும் கட்டிக் கதவுக்கும் வெளிநாட்டுப் பூட்டு! என்றாலும் என்ன? மாரி மிகுந்து நிலம் கசிந்து ஒட்டுகுது ஓடு கசிந்து சிந்த ஒளியும் அணைகிறது! கோழி குழறுகுதே!! மரணாய்தான்! மரணாய்தான்! குழறக் குழறக் கொண்டுபோகுது!! கதவைத் திறப்பம் என்றால் நெஞ்சு பதறுகுது! எமதூதர் வந்து துவக்கு முனையினிலே கதவைத் திறவென்று கொண்டேகும் நேரம் மழை ஓய்ந்து என்ன? நெஞ்சு பதறுகுது திக்கெல்லாம், சிதறித் தெறிக்கிறது! பற்றி எரிகிறது பனங்கூடல் காவோலைப் பொறிகள், காற்றிலை பறக்கிறது, காற்று எழுந்து மோதுகுது பனை சுழன்று ஆடுகுது! வீட்டில் விழுந்துவிட்டால்...? நெஞ்சு பதறுகுது!

பாடசாலைச்சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Image

உறவுகளின் துயர அறிவிப்பு

Image

மானாவளை வலைப்பதிவின் அறிவிப்பு

Image
ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி! சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்து வந்தார். மல்லாவி துணுக்காய் பகுதிகள் அரசபடைகளால் சுற்றிவளைக்கப்படும் வேளையில் கிளிநொச்சிக்குப் இடம்பெயர்ந்து வந்த சில தினங்களில் சுகவீனமுற்று இயற்கை எய்தினார். தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார். இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. அடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. தமிழ் சமூகத்துள் இருக

வன்னியிலிருந்து வந்த முதல் தகவல்

Image
நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் காலமானார் [திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவரான தா.இராமலிங்கம் காலமானார். நவீன கவிதைகளின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த இவர் கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் மக்களின் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முதல் இலக்கியப் பதிவான 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் வெளிவந்த இவரது கவிதைகள் ஆழமான வெளிப்பாடாக அமைந்தன. ©- 2008 - ponn. Hanover, Germany