நெஞ்சு பதறுகுது


வன்னியின் இன்றைய வாழ்நிலை
கல்வீடும் கட்டிக்
கதவுக்கும்
வெளிநாட்டுப் பூட்டு!

என்றாலும் என்ன?

மாரி மிகுந்து
நிலம் கசிந்து ஒட்டுகுது
ஓடு கசிந்து சிந்த
ஒளியும் அணைகிறது!

கோழி குழறுகுதே!!
மரணாய்தான்! மரணாய்தான்!
குழறக் குழறக் கொண்டுபோகுது!!

கதவைத் திறப்பம் என்றால்
நெஞ்சு பதறுகுது!

எமதூதர் வந்து
துவக்கு முனையினிலே
கதவைத் திறவென்று
கொண்டேகும் நேரம்
மழை ஓய்ந்து என்ன?

நெஞ்சு பதறுகுது

திக்கெல்லாம்,
சிதறித் தெறிக்கிறது!

பற்றி எரிகிறது பனங்கூடல்
காவோலைப் பொறிகள்,
காற்றிலை பறக்கிறது,
காற்று எழுந்து மோதுகுது
பனை சுழன்று ஆடுகுது!

வீட்டில் விழுந்துவிட்டால்...?
நெஞ்சு பதறுகுது!

Comments

Popular posts from this blog

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்