Posts

கவிஞரின் நினைவுமலர் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

ஈழத்து கவிதை மூலவர்களில் ஒருவரான‌ கவிஞர் தா. இராமலிங்கம் அவர்கள் 1988 இல் இயற்கை எய்தினார். அவ்வேளையில் எழுதப்பட்ட அவர்சார்ந்த நினைவுமலரில் சில பகுதிகள் இல்லாமல் போய்விட்டன. ஆயினும் அந்நினைவு மலரின் மூலப் பதிவுகளிலிருந்து ஒரு தொகுதி உள்ளடக்கங்கள் பிரதி செய்யப்பட்டு, அவரது முழுமையான கவிதைகளை முன்னிறுத்திய ZOOM வழியிலான உலகம் தழுவிய‌ கலந்துரையாடல் நடைபெறவுள்ள‌ வேளையில் 34 ஆண்டுகளின் பின்னர் புதுப்பிக்கப்படுகின்றது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மானாவளை வலைப்பதிவின் அறிவிப்ப ு ஈழத்தின் நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் அவர்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலி! சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றியிருந்தவருமான திரு. தா. இராமலிங்கம் அவர்கள் காலமான செய்தியினை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம். ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக தா.இராமலிங்கம் திகழ்ந்தார். மீசாலையை வதிவிடமாகக்கொண்டிருந்த இவர் இடம் பெயர்ந்து மல்லாவியில் தனது இளையமகனது குடும்பத்தாரின் பராமரிப்பில் தனது துணையாருடன் வாழ்ந்

கவிஞரின் துணைவியார் இயற்கை எய்தினார்

Image
கவிஞர் இராமலிங்கம் அவர்களின் அன்புத்துணையாக நாற்பத்தொன்பது ஆண்டுகள் நல்லறமாக இல்லறம் பேணிக்காத்த இராமலிங்கம் மகேஸ்வரி அவர்கள் 26.05.2010 புதன்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று 28.05.2010 வவுனியாவில் நடைபெற்று நிறைவெய்தியது.

முதலாவது நினைவு நாள்

Image

நீ ங் கா த நி னை வு க ள் !

Image
.......... ..........

வாழ்க்கைச் சுவடுகள்

Image
பெயர்: .................... தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் தோற்றம்: ................. 16.08.1933 பிறந்த இடம்: ............ கல்வயல் வடக்கு, சாவகச்சேரி தந்தைபெயர்: ............. தாமோதரம்பிள்ளை தாய் பெயர்: ............... சின்னப்பிள்ளை ஆரம்ப, இடைநிலைக்கல்வி: ..... யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பல்கலைக்கழகக்கல்வி: ............ கல்கத்தா சிற்றி கொலிஜ் பட்ட மேற்படிப்பு(B.A.-Hons) ....... சென்னை பச்சையப்பன் கல்லூரி திருமணம்: .............. 1959ம் ஆண்டு புகுந்த இடம்: .......... மீசாலை வடக்கு, கொடிகாமம் மனைவி பெயர்: ...... மகேஸ்வரி கல்விப்பணி: இரத்தினபுரி புனித சென்லூக்கா கல்லூரி ...... ஆசிரியர் ............................. 1959முதல் 1968 வரை யா/மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் ...... ஆசிரியர், உபஅதிபர் .......... 1968 முதல் 1982 வரை ...... அதிபர் .............................. 1982முதல் 1993 வரை கல்விச் சேவையில் இருந்து இளைப்பாறல்-1993 இலக்கியப்பணி இவருடைய "புதுமெய்க் கவிதைகள்" (1964), "காணிக்கை" (1965) ஆகிய இரண்டு கவிதைத் தொக

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

சி.ரமேஷ் தமருகம் வலைப்பதிவில் 2008 செப்ரெம்பர் 26ல் வெளியான கவிஞரின் கவிதைகள் பற்றிய ஆய்வு ஈ ழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார். 1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

Image
யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய இன்றைய அதிபரின் விதப்புரை முன்னாள் அதிபர் திருவாளர் தா.இராமலிங்கம் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மீசாலையூர் மக்களுக்கு மட்டுமல்ல தென்மராட்சி மக்களுக்கே பயன்பெறும் கல்விமானாக விளங்கினார். 1968ம் ஆண்டு வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் நான் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம், எனது குருவாக கணித பாட ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். இளமைத்துடிப்பும்,கற்பித்தலில் உள்ள ஆற்றலும், அக்கறையும், திறமையும் எல்லோர்மனத்தையும் தொட்டுக் கொண்டது. தனியார் கல்வி நிலையங்கள் அற்ற அந்தக்காலத்தில் ஊர்ப்பிள்ளைகளை மட்டுமன்றி என்னையும் தனது வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்து, எல்லோரையும் சித்திபெறவைத்து இன்பம் கண்ட பெருமகனார். கலைப்பட்டதாரியாகிய இவர் தமிழறிவு, சமயறிவு நிரம்பப் பெற்றவராக விளங்கி உயர்தர வகுப்புக்களில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து உயர் சித்திகளையும் பெறவைத்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் நல்லறிவு பெற்றவர்களாகவும், உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும், மேன்நிலை யடைந்தவர் களாகவும் விளங்குக