Posts

Showing posts from September 28, 2008

மங்கா உயிரோவியம்

Image
அ டு த் த வீட்டு நிகழ்வு , அ டுத்த கண்டம் அவுஸ்திரேலியாவிலிருந்து அறிந்த போது, தகவல் பரிமாற்ற நுட்பத்தை வியக்காமல் இருக்க முடியாது. செய்தியறிந்து செய்வதறியாது நின்றோம். துயர்தோய்ந்த அச்செய்தி ஒரு முடிவின்ஆரம்பம்.(BIGINNING OF AN END) நிழலை நிஜமென்று மயக்க நிலையில் மிகவேகமாகச் சுழலும் பூம்பந்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மெய் எனும் பொய்த் தோற்றத்தை மெய்யாக நினைத்து எத்தனை செயற்பாடு. இந்த அரங்கில் நில்லாதனவற்றை நிலை என நினைப்பு. அழகிய ஒவியம்போன்றது அவரது வாழ்வு மங்குவாரின்றி மறையார் செயல்வீரர். (THEY SIMPLY FADE AWAY)தன்னைத்தான் காதலன் ஆவார். ஆகையால் அவரது வாழ்க்கை பிறருக்கு மனத்தாலும் தீங்கறியாது. ஆய்ந்தோய்ந்து எடுத்த கருமத்தைக் கச்சிதமாக முடிக்கும்ஆற்றல்அவருக்கு கைவந்த கலை. தான் சரியென உணர்ந்ததை எந்த சந்தர்ப்பத்திலும் காய்தல், உவத்தல் இன்றி துணிந்து சொல்பவர், செய்பவர். தான் பிழையெனக் கண்டதைச் செய்யவே மாட்டார். ஆதனால் அவரோடுநன்றாகப் பழகியவர்கள் கூட பிழையானதைச் செய்யுமாறு கேட்கத் தயங்குவர். நான் அவருடன் 34 ஆண்டுகள் பழகியும் அவரை முற்றுமுழுதாக

மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

Image
சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிறந்த தா. இராமலிங்கம் அவர்களின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது. இவரின் கவிதைகள் எளிமையானவை. இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு புதுமெய்க் கவிதைகள்(1964) காணிக்கை(1965) நூல்கள் மூலம் கிடைக்கிறது. 1960ல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ.யேசுராசா, திரு. பத்மநாபஐயர் போன்றோர் தொகுத்த 'மரணத்துள் வாழ்வோம்" தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர் பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூகநோக்கு, ஆழ்ந்தபுலமை, மனிதநேயம், இவற்றிற்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதிக அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான். 'ஞாபகமறதி" நோயினால் தன்னை மறந்த நிலையில் வாழ்ந்திருக்கிறார்

இரங்கல் கூட்ட அறிவிப்புகள்

Image
உதயன் நாளிதழ் - ரொரென்ரோ, கனடா வீரசிங்கம் மகாவித்தியாலய பழையமாணவர் சங்கம். கனடா

இனி ஏது?

Image
எங்கிருந்து வந்ததுவோ இந்தக் காற்று தழுவிநிற்கும் மூங்கில் இரண்டு உராய்ந்து பறக்கிறது சினப் பொறிகள் தீப்பொறியாய்! காய்ந்த சருகு சுள்ளி விறகுகளைப் பற்றி, எரியுது பட்ட மரங்களிலும் சேர்ந்து பெருகு நெருப்பு! தளிர்ச் சிரிப்பால் குளிர்விக்கும் செடிகொடிகள், கொத்துக் கொத்தாய்க் பூத்துத் துலங்குகிற செம்மலர்கள் இன்னும் பலவகைகள், குலைகுலையாக் காய்த்துத் தூங்குகிற காய்வகைகள் கனிவகைகள் எல்லாம் வெம்பி வெதும்புவதோ? கருவண்டு முகந்தெரியும் முதுகோட்டுச் சிறகு ஊதி வந்து தேன் உறிஞ்ச.... இனி ஏது? கூர்ச் சொண்டுச் சிறுபறவை கூட்டமாய் வந்து கனிகொத்த..... இனி ஏது?

உங்களுக்குக் கேட்கவில்லையா?

Image
இக்கவிதை 22 ஆண்டுகளின் முன் அமரரால் எழுதப்பட்டது சிறீலங்காச் சிறைகளிலே எமது இளைஞர் உண்ணாமல் நோன்பிருந்து உடல்வற்றி உலர்ந்து ஒடுங்க உள்ளம் மினுங்கி உதித்த நிலவொளியில் விழித்து எழுங்கோ என்று கூவி அழைத்த குரல் இங்கு எம்மைத் தட்டி எழுப்புகுதே! உங்களுக்குக் கேட்கவில்லையா? முற்றுகை சுட்டெரிப்பு சிறைபிடிப்பு எல்லாம் தமிழ் இனத்தை முடமாக்கி இருந்து அரக்க வைக்கும் திட்டமிட்ட சூழ்ச்சிச் செயற்பாடு அல்லவோ? அவர்கள் கேட்கிறார்கள்: "எங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா எங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று. உங்களுக்குக் கேட்கவில்லையா? மரண தேவதைகள் சூழ்ந்து மலர்தூவி மங்களம் பாடி வாழ்த்த சிறைக்கம்பி பாடி வாழ்த்த சிறைக்கம்பி தாவிச் சிறகடித்து வந்த குரல் எமைஇங்கு தட்டி எழுப்புகுதே! அவர்கள் கேட்கிறார்கள்: "உங்களை நீங்கள் மறந்துவிட்டீர்களா? உங்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?" என்று. உங்களுக்குப் புரியவில்லையா? ஏரிவளர்ந்த இளங்காளை மாடுகள் பாரம் இழுத்து வருவதைப் பாருங்கோ! லாடன் கட்டிய கால்களைத் தூக்கி வேகமாய் நடப்பதைப் பாருங்கோ! கப்