மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்

சாவகச்சேரியிலுள்ள கல்வயல் எனும் கிராமத்தில் 1933ல் பிறந்த தா. இராமலிங்கம் அவர்களின் கவிஆளுமை எம்மை எல்லாம் விழிப்புற செய்தது.

இவரின் கவிதைகள் எளிமையானவை.
இவரின் கவிதையின் தெளிவை சிறப்புற நமது வாசிப்புக்கு
புதுமெய்க் கவிதைகள்(1964)
காணிக்கை(1965)
நூல்கள் மூலம் கிடைக்கிறது.

1960ல் இருந்து கவிதைகள் எழுத தொடங்கிய கவிஞர் அலை சமர் போன்ற சிற்றிதழ்களில் எழுதிய கவிதைகளில் சில திரு. அ.யேசுராசா, திரு. பத்மநாபஐயர் போன்றோர் தொகுத்த 'மரணத்துள் வாழ்வோம்" தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நீண்டநாட்களாகவே இருந்துவிட்ட கவிஞர் பற்றி நண்பர் யேசுராஜாவிடமும், ராதையனிடமும் கேட்டிருந்தும் அப்போது பதில் கிடைக்கவில்லை. கவிஞரின் ஆழ்ந்த மௌனம் எமக்கு அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை.

பாடசாலை அதிபராக இருந்த இவரின் சமூகநோக்கு, ஆழ்ந்தபுலமை, மனிதநேயம், இவற்றிற்கும் மேலாக தமிழ்த் தேசியம் மேலான அதிக அக்கறை இவரின் கவிதைகளில் தெரிந்தாலும் நிறைய இன்னும் எழுதியிருக்கலாமோ என்ற ஏக்கம் எம்மிடம் உண்டு. தனக்கான கவிவாரிசை உருவாக்கியிருக்கலாம் தான். 'ஞாபகமறதி" நோயினால் தன்னை மறந்த நிலையில் வாழ்ந்திருக்கிறார் என்பதை அவரது மகன் மூலம் அறிந்தபோது வேதனையாக இருந்தது, இன்றைய இளைய கவி ஆர்வலர்கள் கவிஞரின் கவிதைகளை தேடிப்படித்தல் வேண்டும்.

25.08.2008 அமரத்துவம் அடைந்த கவிஞரின் உடலம் கிளிநொச்சி (தமிழீழம்) மண்ணில் 26.08.2008 தகனம் செய்யப்பட்டுள்ளது.

மரணம் நிஜம் எனினும் வாழ்த்தலுக்கான உறுதிப்பாடு இல்லாத சூழலில் அவரின் மரணம் பல செய்திகளை சொல்லிச் செல்கிறது. அவர் எழுதிய முழுக் கவிதைகளையும் தொகுத்து வெளியிடுவது தான் இலக்கிய உலகம். அவருக்குச் செய்யும் சமர்ப்பணமாகும்.

முல்லை அமுதன்,

லண்டன்

நினைவுத்துளி

அதிபர் தா. இராமலிங்கம் அவர்கள் எனக்கு மாமனார் முறை. மிகவும்கண்டிப்பு மிக்கவர். நானும் இவருடைய இளைய மகன் முருகனும் உறவுடன் கூடிய நண்பர்கள்.

1986ம் ஆண்டு என நினைக்கின்றேன். மாணவர் போராட்டத்தின் எழுச்சிக்கட்டம், திடீர்திடீரென கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள், நாட்டுக்கூத்துக்கள் நடக்கும் காலம். ஒரு சனிக்கிழமை பின்னேரம் வீரசிங்கம் பள்ளிக்கூடத்தில் நாட்டுக்கூத்து என்று கேள்விப்பட்டோம். அந்த வயதிற்குரிய துடிப்பு,ஆவல் மதியமே நானும் முருகனும் என்தம்பி பரனும்அங்கு சென்றுவிட்டோம்.

இரண்டு மணி இருக்கும் மாமனார் வந்து இந்த அலுவலகத்தை பார்த்துக் கொள்ளுங்கள். பூட்டிவிட்டு நில்லுங்கள் யாரும் தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் திறவுங்கள். நான் இன்னமும்10நிமிடங்களில் வந்து விடுவேன் என்று கூறிவிட்டு போய்விட்டார். யாரும் இல்லாது அலுவலகத்துள் நின்ற எம் கண்களின் தேடல்களிற்கு நெல்லிரசப் போத்தல் ஒன்று தென்பட்டது. அதை எடுத்த ஒவ்வொருவரும் ஒரு மிடறு குடித்தோம். சண்டை தொடங்கியது. ஒருவர் கூடக்குடித்ததாகவும், மற்றவர்கள் இன்னும் கூடக்குடிக்க வேண்டும் என்றும் வாக்கு வாதப்பட்டோம். போட்டி போட்டுக் கொண்டு இருந்த எமது கண்களிற்கு சீனி, GLASS என்பன வேறு தென்பட்டன. எல்லாவற்றையும், எடுத்து கரைத்து போட்டியை தொடர்ந்தோம். 3/4பங்கு போத்தலை வெகு இலகுவாக முடித்து விட்டோம். நாம் பிடிபடாமல் இருக்க ஒருவரை அலுவலக வாயிலில் காவலில் வைத்து விட்டு, மற்றவர்கள் குடித்தோம். ஒவ்வொருவரும் மாறி மாறி காவலில் நின்றோம். போட்டி தொடர்ந்தது. திடீரென கதவு மட்டும் சத்தம் கேட்டது. காவலுக்கு நின்ற பரன் ஓடிவந்து மாமா திரும்பி வந்துவிட்டதாகக் கூறினான்.

சீனி, GLASS, நெல்லிரசம் என்பனவற்றை வேகமாக இருந்த இடத்தில் வைத்துவிட்டு கதவை திறந்தோம். மாமா உள்ளே வந்தார். நாங்கள் மூவரும் நெளிந்து கொண்டு வெளியே சென்றோம். மனதுக்குள்பயம். ஆனாலும் பூசி மெழுகிவிட்டோம் என்ற நம்பிக் கையில் இருந்தோம்.

கலை நிகழ்ச்சி தொடங்கியது. 3 பேரும்இருந்துபார்த்துக் கொண்டிருந்தோம். ஒருவர் ஓடிவந்து முருகனை அழைத்துச் சென்றார். ஏதோ அலுவலாக்கும்என்று நாம் கலை நிகழ்ச்சியுடன் ஒன்றிப் போயிருந்தோம். 10 நிமிடம் கழித்து முருகன்அழுது கொண்டு கன்னத்தைப் பொத்திக் கொண்டு வந்தார். எம் அருகில் வந்து அப்பா உங்களை கூட்டிக்கொண்டு வரச்சொன்னதாக கூறினான். 3 பேருமாகபோனோம். வரிசையில் நிற்பாட்டி சணல்பேச்சு. பாடசாலை பணத்தில் வாங்கிய நெல்லி இரசத்தை தான் குடிக்ககூடாது என்று நினைத்துத்தான், தான் தன் வீட்டிற்கு TEA குடிக்க சென்று வந்ததாகவும், நீங்கள் பாடசாலை பணத்தில் வாங்கியதை எந்த யோசனையும் இல்லாது குடித்திருக்கிறீர்களே என்று பேசினார்.

கலைநிகழ்ச்சி முடிந்து மாமாவும் என் அப்பாவும் கதைத்துக் கொண்டு நின்றார்கள். எமது திருவிளையாடல் பற்றிதான் கதைக்கிறார்களோ? என்று ஓட்டுக்கேட்க முயற்சித்து, ஏன் அங்கே அடி வேண்டவேண்டும் என முடிவெடுத்து வீடு வந்து சேர்ந்து விட்டேன். பயம் தெளிய சில கிழமைகள் எடுத்தன. எனினும் இறுதிவரை என் அப்பாற்குச் சொல்லவில்லை. அதற்காக நான் என்றும் நன்றியுடையவனாவேன்.

பாரத் அருணாசலம்

அஸ்தமனம் உதயத்துக்காக


கல்வயலிற் பிறந்து பருவத்தே கலை பெற்று
கல்வியிலே கலை மாணியாகி
முன்னர் செய் நல் வினையால் அருள் பெற்று
தமிழ் தலை நிமிர நின் கடன் செய்து
இசை அகத்திலே இன்புற வாழ்ந்து - ஈற்றில்
மனை மறந்து மக்கட் செல்வங்கள் மறந்து
தமிழிலில் நீ படைத்த கவிதை வரியும் மறந்து
துணைவியாம் மகேஸ்வரியும் உலகும் மறந்து
கதிரின் ஒளியிலேயே கண் அயர்ந்தனையே

- குகரூபன்

MY GRANDFATHER
My grandfather lived with us till my age of five. I called him as appathaththa. He taught me Tamil. I still can remember some stories and songs he used to tell me. When my parents were at work I used to stay with my appathaththa and appamma. Myself and my little brother Karthe liked him very much. He had been a wonderful grandfather.
Grandson
Udhishtran Arudchelvam

OUR DEAR APPAPA
I have known my grandfather from my childhood. I wanted to visit my grandfather in the summer vacation but I couldn't go because of the war. I was his first granddaughter. My grandfather called me poonchelvi, it is combined with my parent's name. I will always remember when he carried me around. I am very sad that he passed away. Granddaughter,
Kasthoori Thamilchelvan

I MISSED YOU
We planed to meet him during last summer. But we could not visit to Sri Lanka because of war. He was a famous writer in Tamil. He wrote stories and poems. I will try to understand those, when I grow up.
Granddaughter
Karveri Thamilchelvan

மறக்கமுடியவில்லை
வீட்டிற்கு குடும்பத்தலைவனாய்
அன்பு காட்டும் நாயகனாய்
கண்டிப்பு, கருணை உள்ளம்
கொண்ட தந்தையாய்
கதைகள், பாட்டுகள்சொல்லிக்
கொடுக்கும் தாத்தாவாய்
மருமக்களை முகமலர்ச்சியுடன்
வரவேற்கும் மாமனாராய்
வாழ்ந்த வாழ்க்கையை
மறக்க முடியவில்லை.
வேண்டும் பொழுதில்
சமையல் வேலைக்கு
உதவி செய்திடும்சேவகனாய்
நோயுற்ற வேளையில் இருகரம்
தாங்கிடும் அன்புத்தாதியாய்
வாழ்ந்த நாட்கள் மறக்க முடியவில்லை
எப்படியும் வாழலாம் என்று வாழாமல்
இப்படித்தான் வாழவேண்டும்
என்று கோடு போட்டு
வரவுக்குள் செலவு செய்து வாழ்ந்த
வாழ்க்கையை மறக்க முடியவில்லை
தலைமகனை இழந்து
வீடே ஒளியிழந்து
இருள்சூழ்ந்த போது
நம்பிக்கை ஒளி ஏற்றி
வாழ்வில் வெற்றி பெற்றதை
மறக்க முடியவில்லை
சைவ ஆசாரப்படி ஒழுகி
அறநெறிப்படி வாழ்ந்ததை
நேரம்கிடைக்கின்ற போதெல்லாம்
'பகவத்கீதை"யின்தத்துவப்பொருளில்
'உபநிடத்தின்"ஆழ்பொருளில்
மூழ்கி இருந்ததை
தியானத்தில் இறைவனுடன்
ஒன்றியிருந்ததை
இப்போது இறைவனுடன்
இரண்டறக்கலந்துவிட்டதனை
நம்பமுடியவில்லையே.

--மனைவி--


நி ன் பணி தொ ட ர் வோ ம்
"கற்க கசடறக்கற்பவை கற்றபின்நிற்க
அதற்குத்தக"
என்ற வள்ளுவர்வாக்குக்கமைய நூல் களை கற்றுத்தெளிந்து,அதன்வழி ஒழுக்க நெறியில் வாழ்ந்தவர்கள் நீங்கள்.
"மங்கலம்என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம்நன்மக்கட்பேறு"
என்ற குறளுக்கமைய நற்பண்புடைய மனையாளைப்பெற்று,நல்ல மக்களைபபெற்று இல்லறத்தை நல்லறமாக வழிநடத்தினீர்கள்.
"தந்தை மகற்கு ஆற்றும்நன்றி அவையத்து
முந்தி இருப்பச்செயல்"
என்ற வளளுவர்குறளுக்கமைய எம்மை எல்லாம்கல்விகேள்விகளில்துலங்கச்செய்தீர்கள். அதுமட்டுமல்ல கல்வியில் ஏழ்மையாய் இருந்த எத்தனையோ மாணவர்களை நல்வழிப்படுத்தினீர்கள். மாணவனொடு மாணவனாக கீழிறங்கிகற்பிக்கும் ஆற்றல்உங்களுக்கே உரித்தான தனிப்பண்பு.
"நன்றி மறப்பது நனறன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"
என்ற குறளில் கூறப்பட்டதற்கமைய நீங்களும் வாழவேண்டும் என்றுஅறிவுரை அளித்தீர்கள்.
உங்களிடம்இருந்து கற்றவை பெற்றவை ஏராளமப்பா. அன்புக் கணவனாய், தந்தையாய், மாமனாய், பேரனாய் இருந்துசெய்யவேண்டிய அத்தனை கடமைகளையும் செவ்வனே செய்து முடித்த உங்களிற்கு வெளிநாட்டில் இருந்த எம்மால் இறுதிக்கடன் செய்யமுடியாமல்போன சோகம் என்றும் எம்மை வருத்தும் அப்பா. உங்கள்அன்பு மனையாளும், இளையமகன் குடும்பமும் தம்கடன் செவ்வனே செய்து முடித்தார்கள் என்ற செய்தி கேட்டோம்.
"குடம்பை தணிந்து ஒழிய புன்பறந்தற்ற
உடம்பொடு உயிரிடை நட்பு"
எனும்வள்ளுவர் வாக்கை நினைத்து தேறுதல் பெறுகின்றோம்.

பி ள் ளை க ள், ம ரு ம க் க ள்

Comments

Popular posts from this blog

பெருந்தன்மைக்கு இலக்கணமாக நினைவில்

ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா. இராமலிங்கம் - ஓர் நோக்கு.

புகழ் பூத்த நண்ப