நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் காலமானார்
[திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவரான தா.இராமலிங்கம் காலமானார்.
நவீன கவிதைகளின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த இவர் கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார்.
தமிழ் மக்களின் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முதல் இலக்கியப் பதிவான 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் வெளிவந்த இவரது கவிதைகள் ஆழமான வெளிப்பாடாக அமைந்தன.
சி.ரமேஷ் தமருகம் வலைப்பதிவில் 2008 செப்ரெம்பர் 26ல் வெளியான கவிஞரின் கவிதைகள் பற்றிய ஆய்வு ஈ ழத்து நவீனகவிதை வரலாற்றில் 1960 ஆண்டுகள் முக்கியமான காலப்பிரிவாகும். 1956 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட தனிச்சிங்களச்சட்டம் அரசியல் மாற்றம் ஒன்றுக்கு வழிகோரியதுடன் 1958 இல் பாரிய இனக்கலவரமொன்றுக்கும் கால்கோலானது. இனரீதியான அரசியல் எழுச்சி மக்கள் மத்தியில் தேசியம் பற்றிய விழிப்புணர்வை தூண்டியதுடன் முற்போக்கு சிந்தனையும், சமூகப்பிரக்ஞையுமுடைய நவீன கவிதைகளையும் தோற்றுவித்தது. உணர்ச்சியும் வேகமும் கொண்ட சுபத்திரன், பசுபதி, ஈழவாணன், வி.சிவானந்தன் பண்ணாமத்துக் கவிராயர் போன்ற கவிஞர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த இதே காலகட்டம் மஹாகவி, இ.முருகையன், எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ஏ.இக்பால், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம் போன்ற கவிஞர்கள் சமூகநோக்கு மிக்க நவீன கவிதைகளை ஆக்கவும் வாய்ப்பளித்தது. இவ்வகையில் தன்னுணர்வுக் கவிதைகளுக்கூடாக தாம் வாழ்ந்த காலத்தையும், சூழலையும் நன்கு பதிவு செய்தவர் தா.இராமலிங்கம் ஆவார். 1933 இல் சாவகச்சேரியிலுள்ள கல்வயல் கிராமத்தில் பிறந்த தா.இராமலிங்கம் சாவகச்சேரி இந்துக்கல்...
கல்வி அறிவுமிக்க சான்றோர்கள் வாழும் கல்வயல் மண்ணில் பிறந்த பெருமைக்குரியவர் நீங்கள். நல்லவரையும், நல்லனவற்றையும் நன்கு தெரிந்தவர். கடமையும் சேவையும் உங்களது இரு கண்கள். வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் புகழ்பூத்த அதிபர்களில் நீங்களும் ஒருவர். எமது சமயத்தில் ~சாதி என்ற அரக்கனைத் துரத்தி அடிக்கவேண்டும் என்று கூறுவீர்கள். சொல்லிலும், செயலிலும் வாழ்ந்து காடடியவர் நீங்கள். உங்கள் கல்விக் குடும்பம் உங்கள் பண்பிற்கும், சேவைக்கும் இறைவன் அளித்த பரிசில். உங்கள் நலனே தங்கள் நலன் என்ற சுயநலமில்லாத தாயின் அன்பை நான் நன்கு அறிவேன். 'பொன்னும் பொருளும் வேண்டாம். தான் விரும்பிய பெண்ணே மேல்" என்ற தாயாரும் சகோதரர்களும் போற்றுதற்குரியவர்கள். இவர்களின் மேலான அன்பே தங்கள் வாழ்வின் ஆணிவேராகப் பரந்து, அன்பு மனைவியைப் பெற்று, நல்லதோர் குடும்பத்தை உருவாக்கி, பெரும் கல்விவிருட்சமாக வளர்ந்து உலகில் ஓங்கி உயர வைத்ததெனலாம். இவை மட்டுமன்றி நல்லாசான்களையும், நண்பர்களையும், உறவினர்களையும், பெற்றமை மேலும் உங்கள் வளர்ச்சிக்கு உரமூட்டியதெனலாம். நண்பரே! எமது பட்டப்படிப்புக் காலம் பச்சைப்ப...
யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய இன்றைய அதிபரின் விதப்புரை முன்னாள் அதிபர் திருவாளர் தா.இராமலிங்கம் அவர்களது மறைவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் தந்தது. மீசாலையூர் மக்களுக்கு மட்டுமல்ல தென்மராட்சி மக்களுக்கே பயன்பெறும் கல்விமானாக விளங்கினார். 1968ம் ஆண்டு வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் நான் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம், எனது குருவாக கணித பாட ஆசிரியராக வாய்க்கப் பெற்றேன். இளமைத்துடிப்பும்,கற்பித்தலில் உள்ள ஆற்றலும், அக்கறையும், திறமையும் எல்லோர்மனத்தையும் தொட்டுக் கொண்டது. தனியார் கல்வி நிலையங்கள் அற்ற அந்தக்காலத்தில் ஊர்ப்பிள்ளைகளை மட்டுமன்றி என்னையும் தனது வீட்டிற்கு அழைத்து இலவசமாகக் கற்பித்து, எல்லோரையும் சித்திபெறவைத்து இன்பம் கண்ட பெருமகனார். கலைப்பட்டதாரியாகிய இவர் தமிழறிவு, சமயறிவு நிரம்பப் பெற்றவராக விளங்கி உயர்தர வகுப்புக்களில் தமிழ், இந்துநாகரிகம் ஆகிய பாடங்களையும் சிறப்பாகக் கற்பித்து உயர் சித்திகளையும் பெறவைத்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் நல்லறிவு பெற்றவர்களாகவும், உயர்பதவிகள் வகிப்பவர்களாகவும், மேன்நிலை யடைந்தவர் களாகவும் விளங்குக...
Comments